Risk taker!

Abseiling என்ற வார்த்தை அண்மைக்காலம்வரை எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகள் abseiling செய்துவிட்டு வந்தபோதுதான் அந்தச் சொல்லே எனக்கு அறிமுகமானது :). Abseiling படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் Paraseiling செய்தபோது எடுத்த படங்கள் உள்ளன. 🙂

கடந்துபோன ஒரு வருடத்திற்குள், சில adventure activities குடும்பத்துடன் செய்திருந்தோம். கடந்த டிசம்பரில் துபாய் போயிருந்த நேரம் Hot air baloon ride, Sand dune drive என்பனவும், பெப்ரவரியில் Florida போயிருந்தபோது Parasailing செய்தோம். Orlando வில் Disney world இன் Epcot centre theme park இலும் பல துணிச்சலான விளையாட்டுக்கள் செய்திருந்தோம்.

ஒரு Risk taker உடைய அம்மாவாக இருப்பதில் பெருமைதான். நானும் படித்துக்கொண்டிருந்த காலத்தில் risk taker என்று பெயர் பெற்றிருந்தேன் :).

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விஜேவர்த்தன எனப்படும் இந்த விடுதியில் சிலகாலம் இருந்தோம். விடுதி அறைகள் இரு புறமும் அமைந்திருக்க, அறைகளின் கதவுகள் நடுவில் ஒரு corridor இல் திறக்கும். வெளிப்புறமாக ஜன்னல்கள் இருக்கும். ஜன்னல்களுக்குக் கீழாக ஒரு சிறிய கட்டு மட்டுமே இருக்கும். யாராவது திறப்பை உள்ளே வைத்துவிட்டு, அறைக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று தவித்துக் கொண்டிருந்தால் நான் உதவிக்குப் போவேன். அல்லது என்னைத் தேடி வந்து அழைத்துச் செல்வார்கள் :). இரண்டாம், மூன்றாம், அல்லது நான்காம் மாடிகளிலுள்ள அறையில் யாருக்காவது இவ்வாறு நிகழ்ந்தால், குறிப்பிட்ட அந்த அறைக்கான ஜன்னல் திறந்திருந்தால், பக்கத்து அறைக்குள் சென்றோ, அல்லது அதற்கு அடுத்த அறைக்குள் சென்றோ, அந்த அறையின் ஜன்னல் வழியாக கட்டடத்தின் வெளியே வந்து, அந்தச் சிறிய கட்டின்மேல் காலை வைத்து, சுவரைப் பிடித்தபடியே நடந்து, பூட்டப்பட்ட அறையின் திறந்திருக்கும் ஜன்னலூடாக உள்ளே குதித்துச் சென்று திறப்பை எடுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து கதவைத் திறந்து வெளியே வருவேன். இதனை ஒரு தடவை அக்கா கண்டுவிட்டு நன்றாகத் திட்டினார்.

இந்தப் பாலம் பேராதனை, சரசவி உயன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான இரயில் பாதையில் இருக்கும், மகாவலி கங்கைக்கு மேலாகச் செல்லும் ஒரு பாலம். இந்தப் பாலத்தின் இரயில் பாதை கீழே மூடப்படாமல் இருக்கும். ஆனால், இதில் வலப்பக்கமாக நடந்து செல்லக் கூடியதாக ஒரு சிறிய பாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நான் அதில் நடக்காமல் நடுவில் இரயில் பாதையிலேயே நடப்பேன். முழுத்தூரமும் அப்படி நடப்பதில்லை :). அதுவும், சிலசமயம், குறுக்காக இருக்கும் பலகைகளில் காலை வைக்காமல் தண்டவாளத்தின் மேல் நடந்து செல்வேன். கால் வழுக்கி விழுந்தால் கீழே மகாவலி கங்கைக்குள் போக வேண்டியும் வரலாம்.  கூட வருவோர்களிடம் திட்டு வாங்கினாலும், அப்படி செய்வதில் ஒரு விருப்பம் இருந்தது.

ஆனால் இங்கே பனிக்காலத்தில் வரும் இந்தப் பனியுறைந்த வழுக்குப் பாதை என்னவோ பயம் கொள்ள வைக்கின்றது :).

 1. Dr.M.K.Muruganandan

  உங்கள் இளமை அனுபவங்கள் மகிழ வைக்கின்றன.
  நான் 70-75 ல் கொழும்பு மருத்துவ பீட மாணவன்
  இத்தகைய சாகசங்கள் கிட்டியதில்லை.
  ஆனால் அண்மையில் துன்கிந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது பல இளவயதினரே துணிந்து இறக்கப் பயப்படும் அதன் அடிப்பகுதிக்கு மகளுடனும் பொறாமகளுடனும் சறுகச் சறுக இறங்கிச் சென்றமை மகிழ்ச்சியளித்தது.புகைப்படங்கள் ஹாரட் டிஸ்க் பிரச்சனையில் தொலைந்துவிட்டது மிகக் கவலை

  • கலை

   //புகைப்படங்கள் ஹாரட் டிஸ்க் பிரச்சனையில் தொலைந்துவிட்டது மிகக் கவலை// அடடா. உங்களுக்கும் இதே பிரச்சனையா? நானும் அண்மையில்தான் இதே பிரச்சனையால் பல படங்களைத் தொலைத்துவிட்டு கவலையில் இருக்கின்றேன் :(.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s