இயக்குநர் சேரனுடன்!
ஒஸ்லோவில் நடந்த தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வந்த இயக்குநர் சேரன் குடும்பத்தினர் நம்ம மழை நகரம் பேர்கனையும் பார்க்க வந்தார்கள். தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன் எங்களுடன் தங்கியதில் மகிழ்ச்சி. என்ன ஆச்சரியம், அவர்கள் வந்து நின்ற இரு நாட்களும் பேர்கனில் மழையே இல்லை :). அதனால் அவர்களையும் கூட்டிக் கொண்டு பேர்கன் சுற்றிப் பார்க்க முடிந்தது. இயக்குநருக்கு guide ஆக இருந்ததில் மகளுக்கும் மகிழ்ச்சி :).
சேரன் அவர்கள் மிகவும் எளிமையானவராக இருந்தார். அவரை படங்களில் பார்த்திருந்தாலும், நேரில் அவரில் ஒரு நல்ல அப்பாவைப் பார்க்க முடிந்தது.
நிறைய படங்கள் எடுத்திருக்கலாம். வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததனால் படங்களை எடுக்கத் தவறி விட்டேன். சில படங்கள் கீழே Slide show வாக உள்ளது. இவற்றில் நான் எடுத்தது மட்டுமில்லாமல் இயக்குநர் சேரன் எடுத்த படங்களும் உள்ளது. இயக்குநர் பேர்கனின் இயற்கை அழகை மிகவும் இரசித்தார்.
ஒஸ்லோ நகரம் இத்தனை அழகா?….
இது ஒஸ்லோ இல்லை. பேர்கன் நகரம். இங்க நீங்க பார்க்கிற பேர்கன் ரொம்ப ரொம்ப கொஞ்சம். இப்போ கோடை காலத்தில் இதை விடரொம்ப அழகு. 🙂