என் செல்லக் குட்டிம்மா!

Posted On பிப்ரவரி 5, 2010

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped 10 responses

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

10 Responses to “என் செல்லக் குட்டிம்மா!”

 1. Vidhoosh

  ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.

 2. Varadaradjalou

  நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.

  குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்

 3. aruna

  ஆஹா…குட்டிம்மா கலக்குறாங்க!

 4. `மழை` ஷ்ரேயா

  நல்லாருக்கு.
  இதெல்லாம் பொக்கிசச் சாமான்… பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. 🙂

 5. விஜயநரசிம்மன்

  கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு…
  அழகான நிகழ்வு… ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் – கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் – அதற்காகவே சொல்கிறேன்!
  பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!
  விஜய் 🙂

 6. கலை

  பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

  விஜயநரசிம்மன்!

  மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.

 7. Karitha Shalee

  மிகவும் அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

 8. பாலாஜி (மேம்)

  என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது!

  மனமார்ந்த நன்றி!

 9. VELU.G

  அருமையான பதிவு

  இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்

  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s