என் குட்டித் தேவதையின் நாடு!
“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்குச் சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாகக் கேட்டபிறகுதான் புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.
அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான், 🙂 ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 . 🙂 யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).
சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான் :). Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.
The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.
பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள் :).
அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவுக்கு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டில் கிடைக்கும் chocolate பற்றியும் சொன்னாள். அதுபற்றி கீழே வரும்.
அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.
அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் :). Thai Milo Kanai Ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம் :). Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.
அவளுடைய நாட்டுல அரசாங்கம் என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். அரசாங்கத்தில இரண்டே இரண்டு பேர்தானாம் ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாளாம் *யாராவது அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.
எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய சீனித்தன்மை இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி உணவுத் திருவிழா நடக்குமாம்.
அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.
அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.
நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.
நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.
Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).
இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.
நல்ல நாடுதான், இல்லையா?
அவள் பாடசாலையில் படிப்பதையும், தனக்குத் தெரிந்த சூழல் பாதுகாப்புத் தொடர்பான பல விடயங்களையும், தனது விருப்பங்களையும் ஒரு கலவையாக்கி, தனக்கென ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. இத்தகைய நாடு உண்மையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 🙂
ungal kutti devathaiyin naadu migavum alagu
knjm recomment pannunga
engalukkum konjam idam koddukka solli
alaguuuuuuuuuuuuuuuuu
knjm recommend pannunga
engalukkum konjam idam kodukka solli
ungal kutti devathaiyidam
泰国米洛煎饼滚装 = Thailand Milo pancake Ro-Ro (source: google translator) 🙂
குழந்தைகளின் கற்பனைகளில் தான் எவ்வளவு சமத்துவமும், இயற்கை பேணலும். குழந்தைகளால் மட்டுமே இத்தகைய உலகை உருவாக்க முடிகிறது. ஆனாலும் வாசிப்பு, கேள்வி, அனுபவ அறிவுகளின் பாதிப்பு குழந்தைகளின் கற்பனைகளிலும் இருக்கிறது.
மகளின் கற்பனை வளம் அருமை. குழந்தைகளிடமிருந்து அறிய நிறையவே இருக்கிறது.
மிகவும் அருமையான கற்பனை!
மகளின் கற்பனைத்திரண் வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!!
குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு அழகானது.
அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)
ஆம், உண்மைதான், குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது. அதை மீண்டும் அடைய முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் என்னிடம் இருக்கிறது.
//அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)//
கொஞ்சம் பொறுங்கோ, மகளிட்டை கேட்டுச் சொல்லுறன். ஏனெண்டா, அவள்தான் அங்க Govt. ல இருக்கிற ஒரே ஆள் 🙂
Really Nice, Dream of your girl will come true.