பகிர்ந்துகொள்வதற்கு சில!
1. கனவு!
என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு :). என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது எப்படி எனக்குன்னு பாத்து இப்படி கனவுகள் வருது??
மேலும் எனது கனவுகளைப் பார்க்க விரும்பினால்? இன்றைய கனவு, வெறும் கனவா, எனது விசித்திரங்கள்.
2. ராசி பலன்!
ஏதோ ஒரு தொலைக்காட்சியில், தினமும் காலையில், யாரோ ஒருவர் ‘இன்றைய ராசி பலன்’ சொல்கிறார். காலையில் தொலைக்காட்சியை வீட்டுப் பெரியவர் போட்டு விடுவார். காலையில் மகளை பாடசாலைக்கு தயார்ப்படுத்தி, வேலைக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது, இந்த ராசிபலன்கள் காதில் விழும். எந்த ராசிக்கு என்ன பலன் என்று கேட்கா விட்டாலும் (அதில் ஆர்வமோ இல்லாததால்), அவர் சொல்லும் பலன்கள் காதில் விழும். இன்றைக்கு காலை என்ன பலன், மாலை என்ன பலன் என்று கூடச் சொல்கிறார். இன்னும் எத்தனை மணிக்கு என்ன பலன் என்று சொல்லாததுதான் குறை என எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த ராசி பலனை கேட்டபோது, எனக்குள் ஓடிய எண்ணம்…. வன்னியில் போர்ச் சூழலின் இறுதிக் கால கட்டங்களில், அங்கே அகப்பட்டிருந்த ஆயிரம் ஆயிரம் மக்களில் எல்லா ராசிக்காரர்களும்தானே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான வாழ்க்கைதானே இருந்திருக்கும்? அல்லது எல்லோருமே ஒரே ராசிக்காரர்களா? இப்படி ஒரே மாதிரியான கடினமான சூழல்களில் அகப்பட்டுக்கொள்ளும் அத்தனை மனிதர்களுக்கும் எப்படி பல ராசியின் பலன்கள் பொருந்திப் போகிறது?
3. அன்பு
மங்கை என்ற வலைப்பதிவில, அவங்க குறிப்பிட்டிருக்காங்க “வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு”. எனக்கென்னமோ யோசிச்சுப் பாத்தா, அதன் நேரெதிர்தான் சரின்னு தோணுது. அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?
//அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?//
மிக வாஸ்தவமான உண்மை.அதிக ஆசைஅன்பு வைத்தல் துன்பம்னுதானே புத்தர் ஆசையைத் துறந்தார்.
நீங்கள் கருவிப் பட்டை இணைக்கலயா?தமிழ்மண்முகப்பில் காணோமே
கருவிப் பட்டையெல்லாம் இன்னமும் இணக்கவில்லை கண்மணி.