நாடு நல்ல நாடு – நோர்வே 5

Posted On மே 9, 2007

Filed under நோர்வே

Comments Dropped 3 responses

நோர்வே 5

முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன்.

நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த தீவுக் கூட்டம் வடதுருவத்துக்கும், நோர்வேயின் பெரு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட தூரத்தின் நடுப்பகுதியில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கின்றது.

இந்த உருகும் பனி மலைகளில் இருந்து உருகி ஓடும் நீர் தேங்கி நிற்கும் ஏரிகள் குடிநீர் சேகரிப்புக்கான இடங்களாக பயன்படுகின்றன. Isbre என்ற பெயர் கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரானது உலகளவில் பெரு மதிப்பை பெற்றுள்ளது.

இந்த குடிநீரானது United States Patent and Trademark இடம் “The World’s Best Drinking Water”® என்ற அடையாளத்தையும், EU trademark இடம் “Isbre-The World’s Best Drinking Water”® என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. இந்த குடிநீர் பெறப்படும் இடம் ஹடங்கர் (Hardanger) என்ற, பேர்கனுக்கு அண்மையாக உள்ள இடமாகும். கிட்டத்தட்ட 100 மைல் நீளமான கடல் நீரேரியின் முடிவில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் இந்த குடிநீர் மிகவும் தூய்மையானதாக கருதப் படுகின்றது.


காரணம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அதி தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்திருப்பதால், செயற்கையான அசுத்தப் படுத்தல், மாசுபடுத்தல் எதுவுமற்று இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றிலும், பழ மரங்கள் நிறைந்த மலைகள், கடல் நீரேரிகள், நீர் வீழ்ச்சிகள் என்ற அழகான இயற்கை அம்சம் நிறைந்த விடயங்களே காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் நிரந்தர குளிர் காலநிலையால், குறைந்த வெப்ப நிலையில் இயற்கையான இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதும் தவிர்க்கப்படுகின்றது. இந்த நீரை உருவாக்கும் உருகும் பனிநிலைகள் 5,000 – 10,000 வருடத்துக்கும் பழமையானவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.

உப்பு, கனிமங்கள், உலோகப் பொருட்களின் கலப்படம் எதுவுமற்ற, மிகத் தூய்மையான நீரை எடுக்க முடிகின்றது. இந்த நீரை பிறந்த குழந்தைக்கு கூட கொதிக்க வைக்காமல் கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். (ஆனால் குழந்தை விடயத்தில் நான் அந்த risk எடுக்கவில்லை 🙂 ).

அழகின் ஒரு முக்கிய பகுதி 🙂

முந்தைய பதிவில் இன்னொரு இயற்கை அழகை குறிப்பிட மறந்து விட்டேன். பல நீர் வீழ்ச்சிகளை ஆங்காங்கே கொண்டிருக்கும் நீண்ட பள்ளத் தாக்கு. பேர்கனில் இருந்து அதிக தொலைவில் இல்லாத Fløm valley க்கு சென்று வந்தது மறக்க முடியாத இனிமையான அனுபவம். உயரமான மலைத் தொடர்களில் இருந்து மலையடிவாரத்துக்கு செல்ல பஸ் உம், புகையிரதமும் உண்டு. வளைந்து வளைந்து (spiral hairpin turns) செல்லும் பாதையில், பள்ளத்தாக்கை நோக்கி போவதும், அங்கிருந்து மேலே வருவதும், வழி முழுவதும் அழகான நீர் வீழ்ச்சிகளை கண்டு களிப்பதும் இனிமையாக இருக்கும். போகும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீர் வீழ்ச்சியின் உள்ளிருந்து வருவதுபோல் இரு பெண்கள் வந்து பாடலுக்கு நடனமும் ஆடுவார்கள். பள்ளத்தாக்கு இருப்பது Fløm என்ற இடத்தில் மக்கள் வசிக்கின்றார்கள். அங்கே மூன்று தினங்கள் தங்கி, அந்த இடத்தின் அழகை முழுமையாய் அனுபவித்துவிட்டு வந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.

3 Responses to “நாடு நல்ல நாடு – நோர்வே 5”

 1. களத்துமேடு

  நோர்வே நண்பருடன் இப்போது தான் தொலைபேசியில் கதைத்தேன், அங்கு நேரம் இரவு 10.50, இன்னும் தெரு மின்விளக்குகள் சரியாகப் போடப்படவில்லை, புறச்சூழல் வெளிச்சமாக இருப்பதாகச் சொன்னார்.
  [url=http://www.myspacepicturehost.com][img]http://www.myspacepicturehost.com/uploads/d3b581b6d0.jpg[/img][/url]
  நீங்கள் தந்த isbre பற்றிய தகவலுக்கு நன்றி

 2. வடுவூர் குமார்

  ISBRE பற்றி தெரிந்துகொண்டேன்.
  நன்றி

 3. கலை

  இருவருக்கும் நன்றிகள்!

  களத்துமேடு!
  உங்கள் நண்பர் நோர்வேயின் எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதை அறியலாமா? நீங்கள் தந்திருக்கும் இணைப்புக்கள் எங்கே செல்கின்றது. புரியவில்லையே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s