Monthly Archives: மே 2007

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக … Continue reading

Posted in நோர்வே | 1 பின்னூட்டம்

நாடு நல்ல நாடு – நோர்வே 6

நோர்வே 6! வரலாறு இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை :). அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் … Continue reading

Posted in நோர்வே | 13 பின்னூட்டங்கள்

நாடு நல்ல நாடு – நோர்வே 5

நோர்வே 5 முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய … Continue reading

Posted in நோர்வே | 3 பின்னூட்டங்கள்

நாடு நல்ல நாடு – நோர்வே 4

நோர்வே – 4! நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே … Continue reading

Posted in நோர்வே | 3 பின்னூட்டங்கள்

அம்மாவே குழந்தை!

அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி! அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை காட்டி விட வேண்டும் என்ற ஆசையிலும், நமது குட்டித் தேவதை உலகத்தை பார்க்க ஆவலாய் காத்திருந்த காலமாய் இருந்ததாலும், அவர்களுக்கு டூரிஸ்ட் விசாவுக்கு அனுமதி கேட்டுப் பார்த்தோம். அன்றைய கால கட்டத்தில் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா எடுப்பது இலகுவாக … Continue reading

Posted in நோர்வே | 7 பின்னூட்டங்கள்

நாடு நல்ல நாடு – நோர்வே 3

நோர்வே 3! நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில் நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன். நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான … Continue reading

Posted in நோர்வே | 3 பின்னூட்டங்கள்

நாடு நல்ல நாடு – நோர்வே 2

நோர்வே – 2 முந்தைய எனது பதிவில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றா என்ற கேள்வியை gl கேட்டிருந்தார்.நீண்ட காலமாக கப்பல்துறை நோர்வேயின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆனால் நோர்வேயின் இயற்கை வளங்களே தற்போதைய அதி உயர் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. பெற்றோலிய வளமும், நீர்மின்னியல் சக்தி, மீன் … Continue reading

Posted in நோர்வே | பின்னூட்டமொன்றை இடுக

நாடு நல்ல நாடு – நோர்வே 1

நோர்வே – 1 நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.மே 17 ஆம் திகதி நோர்வே நாட்டின் ‘அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினம்’ (Constitutional Day) அல்லது தேசிய தினம் (National day) வருகின்றது. அதற்கு முன்னராவது நாம் வாழும் நாடுபற்றி எப்படியாவது எழுதி விட … Continue reading

Posted in நோர்வே | 8 பின்னூட்டங்கள்

எனது விசித்திரங்கள்!

ஷ்ரேயா என்னிடம் இருக்கிற சித்திர விசித்திர குணாம்சங்களை சொல்ல அழைத்து பல நாட்கள் (அல்லது கிழமைகள், அல்லது மாதங்கள்) ஆயிற்று. ஷ்ரேயா, ‘விசர்க்குணங்கள்’ என்பதை மற்றவர்களிடம் கேட்கும்போது மட்டும் கொஞ்சம் நாகரீகமாக ‘விசித்திர குணங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் போல இருக்கு :). (பின்ன என்ன, ‘விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O)’ எண்டு … Continue reading

Posted in கிறுக்கல்கள் | 4 பின்னூட்டங்கள்