மாட்டிக்கிட்டேன்!!
அன்னைக்கு insects பத்தி என்னமோ TV ல போச்சுது. அதுல தேனீ பத்தி போனது. அப்போ நான் என் 8 வயது மகளுக்கு விளக்கம் கொடுத்துக் கிட்டே வந்தேன். தேனீ தேன் இருக்கிற இடத்தை மத்த தேனீக்களுக்கு எப்படி சொல்லும், தேனீ சமூகத்துல பெண் தேனீக்கள் தான் வேலையாட்கள், அதுல ஒரு பெண் தேனீ மட்டும் அரசியா இருக்கும். ஆண் தேனீக்களோட வேலை just mating தான், அவங்க வேறு ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க ன்னு சொன்னேன். மாட்டிக்கிட்டேன், நல்லா மாட்டிக்கிட்டேன். அவ உடனே கேட்டா, mating? அப்படின்னா என்ன? நான் அதுக்கு எப்படி பதில் சொல்லுறதுன்னு நல்லா முழிச்சேன். அப்புறம், babies வாறதுக்கு அவங்க செய்யுறதுதான் mating னு சொன்னேன். நல்ல வேளையா அவ வேறு எதிலோ ரொம்ப busy யா இருந்ததுனாலே, அதுக்கு மேலே கேள்வி கேக்காம போய்ட்டா. தப்பினேன், பிழைச்சேன்.
இது நானாப் போய் மாட்டிக்கிட்டது. அவளா நிறைய தர்ம சங்கடமான கேள்வியெல்லாம் கேக்கிறா. உதாரணம் baby எப்படி வயுத்துக்குள்ளே வருது? அவளுக்கு சரியான பதிலை, அவளுக்கு புரியுற மாதிரி எப்படியெல்லாம் சொல்லுறதுன்னு மண்டையை உடைக்கிறேன். “இப்போ சொன்னா உங்களுக்கு புரியுமா தெரியலை, நீங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு அது சொல்லித் தாறேன்” ன்னு சொன்னேன். அவளும் (நல்ல வேளையா) அந்த பதிலில் திருப்தியாகி போய்ட்டா.
நான் படுகிற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். 😦
நேத்தும் அவளுக்கு ஆசிரியை வாசிக்க கொடுத்த புத்தகத்தில் fertilized egg பத்தி இருந்தது. அப்படின்னா என்னன்னு கேக்குறா. அதை எப்படி சொல்லி, எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியாம கஷ்டப் படுறேன். குழந்தைகளுக்கு இதை எப்படி புரிய வைப்பதுன்னு விளக்கும் ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்க. அப்படியே வருங்கால பெற்றோருக்கும் உதவும். 🙂
அந்த புத்தகம் அழிந்து போகும் இனமான வெள்ளை சுறா பற்றிய புத்தகம். அதில்தான் இந்த கருக்கட்டப்பட்ட முட்டை பற்றி வந்தது. என்னால் கருக்கட்டிய முட்டை, கருக்கட்டாத முட்டை என்பவை பற்றியும், கருக்கட்டிய முட்டையில் இருந்து குட்டி, அல்லது குஞ்சு வருவது பற்றியும் கூற முடிந்தது. ஆனால் எப்படி கருக்கட்டுகின்றது என்பதற்கான விளக்கத்தை கூற முடியவில்லை.
குழந்தைகளின் இடக்கு மடக்கான கேள்விகளுக்கு எப்படி விடை சொல்லிக் கொடுப்பது என்பதுபற்றி படிக்க வேண்டி இருக்கிறது.
அவங்க வகுப்பில் இப்போது விவாதம் செய்வது எப்படி? ஒத்த கருத்துக்களை அல்லது எதிர் கருத்துக்களை கொடுப்பது எப்படி? என்று எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க. அதுக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு புத்தகம் கொடுத்து, அந்த புத்தகத்தின் ஆசிரியர் தனது கருத்தை சரியாக சொல்லி இருக்கிறாரா, அவரது கருத்துக்கு ஆதரவாக தேவையான வலுவான ஆதாரங்களை கூறியிருக்கிறாரா? அதை எப்படி கூறியிருக்கிறார்? அவருடன் ஒத்துப் போகின்றீர்களா அல்லது எதிர் கருத்து கொண்டிருக்கிறீர்களா? என்பது போன்ற ஒரு ஆய்வு. அடுத்த கிழமைக்குரிய விவாத தலைப்பு Global warming.
நம்ம படிச்ச மாதிரி படிப்பில்லை இப்போ. 🙂