பூக்கள் மட்டும்!!

Posted On திசெம்பர் 7, 2006

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped 3 responses

இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.


இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் மனதில் தோன்றியது. சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை.

 

3 Responses to “பூக்கள் மட்டும்!!”

 1. tamilnathy

  உங்களை நான் முன்பு வாசித்ததில்லை. ஆனால், நிறம் உதிர்ந்தாலும் உதிராமல் இருக்கும் பூக்களை உறவுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்ததில் உங்கள் மென்மையான இதயம் அறிந்தேன். மிக எளிமையாக ஒரு ‘தேவதைக்குத் தாயான சாதாரண பெண்’என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டது… என்னை அசாதாரணமாக ஈர்த்தது. நல்லவர்களோடு நட்பு இனிது.

 2. சேதுக்கரசி

  இன்னொரு வகைச் செடியுண்டு, அதில் சின்னச் சின்ன சிகப்புப் பழங்கள் இருக்கும் (செர்ரிப் பழம் போல, ஆனால் இன்னும் சிறியதாக) அந்தச் செடியிலும் இலைகள் உதிர்ந்தபின்னும் அந்தப் பழங்கள் குளிர்காலம் முழுவதும் விழாமல் நிற்பது பிரமிப்பாயிருக்கும்.

  //தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்.//

  வாவ். உண்மை தான்.

 3. கலை

  பின்னூட்டத்துக்கு நன்றிகள் தமிழ்நதி, சேதுக்கரசி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s