கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!

Posted On திசெம்பர் 1, 2006

Filed under குழந்தை

Comments Dropped 2 responses

கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!

அண்மையில் எங்கள் வீட்டிற்கு எனது சினேகிதியின் குடும்பத்தினர் வந்து தங்கினார்கள். அவருக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை செளம்யாவுக்கு நான்கு வயது. அந்தக் குழந்தையை இப்போதுதான் முதன் முதலாய் சந்தித்தேன்.

அவர்கள் வந்து சேர்ந்த நேரம் இரவு 10.30 மணி, வந்து இறங்கிய நேரத்தில் செளம்யா நித்திரையாகி இருந்தாள். வந்து இறங்கியதும் அவளை எழுப்பினார்கள். அவள் கண்ணை விழித்து எங்களைப் பார்த்தாள். அப்போது நான் அவளிடம் “என்னை தெரியுமா?” என்று (meaningless?) கேள்வி ஒன்றைக் கேட்டேன். அவள் அதுக்கு ஒரு சிரிப்பு சிரித்தாளே பார்க்கலாம். அழகான ஒரு கள்ளச் சிரிப்பு. அந்தச் சிரிப்பை பிறகு பல தடவை எங்கள் வீட்டில் இருந்த பொழுதுகளில் பார்த்தேன். அதுபற்றி கவிதை (அல்லது வழமையான எனது கிறுக்கல்) ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. இதுபற்றி இன்னொரு சினேகிதி (எம் இருவருக்கும் பொதுவான சினேகிதிதான். குழந்தை செளம்யாவையும், அவளது கள்ளச் சிரிப்பையும் அறிந்த சினேகிதிதான்), தானே ஒரு கவிதை வடித்து விட்டாள். அந்த கவிதை இங்கே.

வீட்டிற்கு விஜயம் செய்த கவிதை இங்கே>

Photobucket - Video and Image Hosting

நண்பியின் கவிதை இங்கே>

கள்ளச் சிரிப்பில் என் கற்பனையை தூண்டி
சிறு கவிதை புனைய வைத்த கண்மணியே
கற்றவர்கள் பெற்றெடுத்த கருவிழி நீ – உன்
மேனிதான் கறுப்பு, உன் உள்ளம் வெள்ளையடி

நாலாண்டென்ன, நாற்பது ஆனாலும்
உன் சிரிப்பு மாறக்கூடாது
கற்பதைக் கற்று கால்நூற்றாண்டில் பெறும்
கல்வி பேரொளியாய் வர
கந்தனை வேண்டுகிறேன்

கவிதைக்கு நன்றி சொர்ணா. 🙂

(கவிதைக்கு மட்டுமில்லை. பல காலமாய் தொடப்படாமல் இருந்த இந்த பக்கத்தை தொட வைத்ததுக்கும் நன்றி. :))

2 Responses to “கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!”

 1. sooryakumar

  தங்கள் பதிவுகள் மிக மிக அருமையாய் இருக்கின்றன. நான் காலங்கடந்து அவற்றைப் பார்த்தாலும்..காலத்தால் அழியாத படைப்புகள் என்பதும் இவைதானோ..!
  எனது வலைப் பூ பற்றிய ..தங்கள் கருத்தறிய ஆவல்.

 2. வல்லிசிம்ஹன்

  கலை ,
  அருமையான கவிதை.அழகியைப் பார்த்தால் கவிதை தானெ வருமே.

  இவல் வளம் பெற்றூ வாழ வாழ்த்துகள்.
  உங்கள் பக்கம் வரத் தோன்றிய தருணத்திற்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s