என் குட்டித் தேவதைக்கு….
என் குட்டித் தேவதைக்கு….
நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!
நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்
எங்கள் பெற்றோரும் எங்கள் சிறு வயதில் இதையே தான் செய்தார்கள். நாம் வளர்ந்த பின்னும் அது உண்மை என்று நம்பி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
ஓ! …. தாம் பெற்ற செல்வத்தின் சிரிப்பில், வெற்றியில் ஆனந்தம் காணும் பெற்ற உள்ளம்.
நல்லதோர் கவிதை என் மனதையும் தொட்டுச் சென்றது.
எல்லார்வீட்டிலும் நடக்கிற விஷயம்தான் என்றாலும், அத ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க. மனசதொட்டுவிட்டது.
அதுக்கு ஒரு உதாரணம் கொடுக்கணும்னு தோணுது. நான் அடிக்கடி chinese restaurant போவேன். ஒருஒரு தடவையும் chopstick உபயோகிக்க முயற்ச்சிப்பேன். ஆனா வரவேவராது. அப்படி ஒருதடவை போனபோது chopstick கேட்டா, rubber band attached chopstick கொடுத்தாங்க. அப்பிடியே அசந்து போய்ட்டேன். அதுவும் சின்னவிஷயம்தான், ஆனா உங்களுக்கு தெரியாது நான் எவ்வளவு சந்தோஷபட்டேன் என்று.
அந்த மாதிரி உங்க கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு.
m..arumaiyaana kavithai kalai
anpudan rahini
ஐயோ இது என்னுடைய கவிதையல்ல. “நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்”
என்று போட்டிருக்கிறேனே, கவனிக்கவில்லையா ராஹினி? ஆனாலும் நான் ரொம்ப ரொம்ப ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. (அதுசரி, எங்கிருந்து இந்த வலைப்பதிவை தேடிப் பிடித்தீர்கள்?) என்னுடைய வலைப்பதிவெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று இப்போது எழுந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கு. 🙂
சகோதரி,
மிகவும் இனிமையான கவிதை தேடி கொடுத்திருக்கீங்க.
நான் சக்தியிடம் இக்கவிதை போலவே நடந்து கொள்கிறேன். மருமகள் எப்படி இருக்கிறார் ?
குழந்தை சக்தி கொடுத்து வைத்தவர்தான். அருமையான அப்பா கிடைத்திருக்கிறாரே.
மருமகளும் நலமே. மருமகளும் கொடுத்து வைத்தவர்தான். 🙂
நல்ல கவிதை. என் வீட்டிலும் ஒரு குட்டி தேவதை வளர்கிறாள். ரசித்துப் படித்தேன்.
எல்லா இதழ்களும் எல்லாரும் படிப்பதில்லை. உங்கள் சேவை. நாட்டுக்குத் தேவை.