புதிரா??

இது ஒரு சிறிய கணக்கு. இந்தக் கணக்கை மனதில் செய்து பாருங்கள். எழுதவோ, கல்குலேட்டரைப் பாவிக்கவோ வேண்டாம். மனதில் செய்து பார்த்ததும், முதலில் உங்களுக்கு தோன்றும் விடை சரியா என்று பின்னர் செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

பி.கு> இது ஒரு மிகச் சிறிய கணக்குத்தான். இருந்தாலும் இந்தக் கணக்கை மனதால் செய்யும்போது நமது மூளை நம்மை ஏமாற்றி விடுவதாகச் சொல்கிறார்கள்.

கணக்கு இதுதான். எங்கே கணக்கை மனதால் கூட்டி விடையை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் இரண்டாம் முறை கூட்டியோ, அல்லது எழுதிக் கூட்டியோ, அல்லது கல்குலேட்டர் பாவித்தோ பாருங்கள். (உங்கள் மூளை உங்களை ஏமாற்றியதா, இல்லை காப்பாற்றி விட்டதா என்று எனக்கும் கூறுங்கள். :))

1000 ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் 40 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் அதனுடன் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
அதனுடன் 30 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்.
இப்போது அதனுடன் 20 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் இதனுடன் ஒரு 10 ஐ கூட்டுங்கள்.
உங்களுக்கு வரும் மொத்தம் எவ்வளவு?

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in புதிர். Bookmark the permalink.

14 Responses to புதிரா??

 1. தேவ் | Dev சொல்கிறார்:

  4100??? enna kanakku ithu

 2. கலை சொல்கிறார்:

  இது ஒரு சிறிய, எல்லோரும் செய்யக் கூடிய கணக்குத்தான். ஆனால், பலரும் இதற்கு பிழையான விடையாக 5000 என்று சொல்கிறார்களாம். காரணம், விரைவாக இந்தக் கணக்கை மனதால் செய்யும்போது, கடைசியாக அந்த 10 ஐ கூட்டும்போது, நமது மூளை 10 ஆம் இடத்தையும், 100 ஆம் இடத்தையும் குழப்பிக் கொண்டு (confusion in decimals), அதிகமான 100 ஆம் இடத்தை தெரிவு செய்வதே காரணம் என்று விளக்கப்படுகிறது.

  ஆனால் உங்களது மூளைக்கு குழப்பம் வரவில்லை போலிருக்கு. அதுதான் சரியாக கூட்டி விட்டீர்களே. 🙂

 3. கலை சொல்கிறார்:

  கணக்கை செய்து பார்த்து விட்டு, அப்படியே ஓடிவிடாமல், இங்கே பதில் எழுதியமைக்கு நன்றி Dev

 4. soft tester சொல்கிறார்:

  யோவ் உங்கள மாதிரி ஆளப் பார்த்தாலே கிராமத்துல இருக்கிறவன்லா பயப்புடராண்டா

  எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க

  ஐயா விளையாட்டுக்கு இருந்தா ஓ.கே

  சும்மா இருக்கிறவனையும் இப்படியெல்லாம் சொல்லிகொடுத்து கெடுத்துபுடாடீங்க அம்புத்துதான் சொல்லிட்டேன்.

 5. பரஞ்சோதி சொல்கிறார்:

  சகோதரி,

  எனக்கு மொத தடவை 50000 வந்தது, அப்புறம் 5000 வந்தது, இப்போ கூட்டி பார்த்தா 4100 வருது. அது எப்படி? எது சரி? 🙂

 6. கலை சொல்கிறார்:

  50000 வந்துதா? இது கொஞ்சம் ஓவர் பரஞ்சோதி. 🙂

  5000 என்று மூளை சொல்வதற்கு காரணம் அந்த confusion in decimals தான் என்று சொல்கிறார்கள்.

  ஆனால் உங்களுக்குத்தான் தெரியுமே. உண்மையான பதில் அந்த 4100 தான். (சந்தேகம் இருந்தால் கல்குலேட்டரின் உதவியை நாடுங்கள். கல்குலேட்டரிலும் நம்பிக்கை இல்லாவிட்டால்… ஒரு தடவை காகிதத்தில் எழுதி கூட்டிப் பார்த்து விடுங்கள். :))

  இங்கே பதில் தந்தவர்களுக்கு நன்றிகள்.

 7. கலை சொல்கிறார்:

  அப்படியே அங்கே இருக்கும் அந்த உண்மையான ஜப்பான் புதிரையும் ஒருக்கால் திரும்பி பாருங்க.

 8. G.Ragavan சொல்கிறார்:

  பரஞ்சோதி அளவுக்கு இல்லை. 5000 வந்தது உண்மைதான். இத்தனைக்கும் பாத்துப் பாத்துக் கூட்டியும் தப்பு நேர்ந்தது. பிறகு விடையைப் பார்த்ததுமே செய்த தவறு உறைத்தது.

 9. றெனிநிமல் சொல்கிறார்:

  நன்றி கலை.

 10. கலை சொல்கிறார்:

  வருகைக்கு நன்றி ராகவன், றெனி நிமல். எனக்கும் 5000 தான் வந்தது. அதை சொல்லாமல் விட்டு விட்டேனே, ஹி ஹி.

 11. டி ராஜ்/ DRaj சொல்கிறார்:

  4100 தான் வந்தது 🙂 முதல்முறையாக ஒரு கணக்கை சரியாக போட்டுவிட்டேன் 🙂

 12. கலை சொல்கிறார்:

  சோ, உங்க மூளை உங்களை ஏமாத்தாமல், நல்லாவே காப்பாத்துது. 🙂

 13. Murugan சொல்கிறார்:

  Hi Kalai,

  The Answer to the Japanese

  1. Thief and Police back only Police
  2. Police and Girl and Back Thief and Police
  3. Girl and Mother and Back Mother
  4. Father and Mother and Back Father
  5. Police and Thief and Back Mother
  6. Father and Mother Back Father
  7. Father and Son Back Police and thief
  8. Police and Son Back Police
  9. Police and thief

  The GAME ENDS

 14. கலை சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் முருகன். (நானே மறந்திருந்தேன். எங்கிருந்து கண்டெடுத்தீங்க?). 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s