மழையில் கண்ணீர்!!
மழையில் கண்ணீர்!!
அன்று அவன்
சொன்னான்…
ஒரு குடைக்குள்
நீயும் நானும்
இணைந்திருக்கும்
நிமிடங்களின்
நினைவுகள்
மனதினில்
நீங்காமல் என்றும்
நிறைந்திருக்கும்…..
இன்று அவள்
சொல்கிறாள்…
நனைந்திருந்த
நிமிடங்கள்
பாரமாய் நெஞ்சினிலே
பிரிந்துவிட்டோம்
என்பதனால்…
குடை பிடிக்க
இஷ்டமில்லை…
கன்னத்தில்
காய்ந்த கண்ணீர்
கரையட்டும்
மழை நீரில்….
மழை நீர் மங்கையவளின் கண்ணீரையும்
கவலைகளையும் கழுவி விடட்டும்.
ஊமையாகிப் போன மனதொன்றின் உள்ளக் குமுறலை இந்தக் கவிதையில்
காண்கின்றேன். நல்ல கவிதை வாழ்த்துக்கள் கலை.
கண்ணில் ஏன் கார்காலம்?
மழை நீர் கண்களின் கண்ணீரை கறைக்கும் நெஞ்சில் உள்ள நினைவுகளை எது கறைக்கும்
என்னுடைய கிறுக்கல்களைப் பார்த்து, கருத்து தந்தமைக்கு நன்றிகள் றெனிநிமல், சத்தியா, நவீன் பிரகாஷ், குமரன். 🙂
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
தமிழ் தகவல் தொழில் நுட்பத்தை வளர்க்க நானெங்கே பாடுபட்டேன். ஒண்ணுமே புரியலையே.
நெஞ்சமென்னும் நீர்தேக்கத்தில் நீ!
ஒவ்வொரு துளி
நீரிலும் நீ!
நிரம்பிவழிகிறது கண்ணின் வழி,
மழை உன்னைக் கண்டவுடன்!
thanks for your comments at http://www.osai.tamil.net ! seen your blogs too! this one is touching … keep it up.
With regards
OSAI Chella
http://www.chella.info
“Nalla Kavithai”…Keep posting..
குடை பிடிக்க
இஷ்டமில்லை…
கன்னத்தில்
காய்ந்த கண்ணீர்
கரையட்டும்
மழை நீரில்
நல்ல கவிதை வாழ்த்துக்கள் கலை.
Very few
இப்போதான் படிக்கிறேன்….
அருமை.
என் பதிவுகளையும் பாருங்கள்.