மழை!

Posted On செப்ரெம்பர் 14, 2005

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நோர்வே

Comments Dropped 10 responses

என்ன இது… ‘மழை ஷ்ரேயா’ வுக்குப் போட்டியாக இங்கே மழை பற்றிய பதிவா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இது சும்மா, இங்கே நமது இடத்தில் பெய்திருக்கும் மழை பற்றிய பதிவுதான்.

வழக்கமாக எமது வீட்டு ஜன்னல் இரவு நேரங்களில்(லும்) கொஞ்சமாய் திறந்தே இருக்கும். ஆனால் நேற்றிரவு குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததனால், ஜன்னல்கள் அனைத்தையும் முழுமையாகப் பூட்டி விட்டே படுத்தோம். நமது இடத்தில் நேற்றிரவெல்லாம் மழை பெய்து தள்ளியிருக்கிறது. ஆனால் நமக்கு எதுவுமே தெரியாது. ம்ம்ம். இரவு சுகமான உறக்கத்தில் இருந்த நாம், காலையில் எழுந்து பார்த்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னலூடாக வெளியே பார்த்தால், வீட்டிற்கு முன்னால், வீதியில் பல பெரிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகளில் மூட்டைகளைப் போட்டு வைத்திருந்தார்கள். எதற்கு என்று யோசித்துப் பார்த்தபோதுதான் புரிந்தது, மழைத் தண்ணீர் வழிந்து வீட்டுப்பக்கம் வந்து விடாமல் போட்டிருக்கிறார்கள் என்று.

அப்போதும்கூட கடுமையான மழை பெய்திருப்பது தெரியவில்லை. இன்று மழை என்றபடியால், எனது நடைப்பயணத்தை ஒத்தி வைக்கும்படி கணவர் கூறினார். நானோ, மறுத்துவிட்டு, ரெயின்கோட் சகிதம் நடந்தே வேலைக்கு புறப்பட்டுவிட்டேன். வெளியே வந்தால், இந்தக் குளிரிலும், மழையிலும் சிலர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பதைக் காண முடிந்தது. நமது வீட்டுப்பக்கம் பெரிதாக மழையின் பாதிப்பு எதையும் காண முடியவில்லை. அப்படி இருந்தும், முன்னேற்பாடாக இவ்வளவு வேலைகள் செய்யப்படும் இடத்தில் இருக்கிறோமே என்பது மனதில் ஒரு சிறு திருப்தியைத் தந்தது. அதே வேளை, இவ்வளவு மழை பெய்ததோ, இத்தனை பாதிப்பு நடந்ததோ எதையுமே அறியாமல், நாம் சுகமாக நித்திரையில் இருந்த இந்த குளிர் இரவில், இந்த மழையில், சிலர் நமக்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்களே என்பது உறுத்தலாகவும் இருந்தது.

அதன் பின்னர் செய்திகளை எல்லாம் அறிந்தபோது மனதுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது. இயற்கையின் அழிவுகள்தான் எத்தனை ரூபத்தில்? 😦

இங்கே வேலைக்கு வந்த பின்னர்தான் மழையின் பாதிப்பு பற்றிய செய்திகளை வாசிக்கவும், கேட்கவும் முடிந்தது. (வேலையில் இருந்துதானே blog எழுத முடியும், பின்னே வீட்டிலிருந்தா எழுத முடியும்?). நேற்றைய தினம் மட்டும் சராசரியாக 100 – 150mm மழை இந்தப் பகுதியில் பெய்திருப்பதாக அறியப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடந்த ஒரு தினத்தில் மட்டும் 179mm மழை பெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில், பாலங்களுக்கு மேலாக தண்ணீர் வெள்ளமாய் பாய்வதையும், பள்ளமான பகுதிகளில் வெள்ளம் வீதிகளில் பாய்ந்து கொண்டிருப்பதையும் காண முடிவதாகக் கூறுகிறார்கள்.

மிக அண்மையாக உள்ள பிரதேசமொன்றில், கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவினால், சில வீடுகள் உடைந்து விழுந்துள்ளது. இதில் ஒருவர் இறந்துள்ளார். மற்றும் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் குழந்தைகள் நால்வரும், பெரியவர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இந்த இடங்களில், தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.

சரியாக நீந்தப் பழகாமல் விட்டுவிட்டேன், பார்க்கலாம்..

  1. Dharumi

    குட்டி தேவதையின் அம்மாவுக்கு, அது சரி’ங்க; எங்க இருந்து எழுதியிருக்கீங்க? மும்பையா?

    Like

  2. `மழை` ஷ்ரேயா(Shreya)

    //சரியாக நீந்தப் பழகாமல் விட்டுவிட்டேன், பார்க்கலாம்//

    நானும் தான். நீந்தச்சொல்லி வைத்தியரே சொல்ல்லிட்டார்!!

    தருமி..கேள்வி கேட்பதன்றி வேறொன்றும் அறியீரோ?? :O)

    Like

  3. கலை

    தருமி! அப்போ மும்பையிலும் இதேபோல்தான் மழை தொடர்கிறதா? நான் மும்பையில் இல்லையே. 🙂

    Like

  4. Go.Ganesh

    கலை கொஞ்சம் நம்ம ஊரு பக்கம் வந்துட்டுப் போங்க மழையே பெய்ய மாட்டேங்குதாம்

    // சரியாக நீந்தப் பழகாமல் விட்டுவிட்டேன், பார்க்கலாம். //
    ஒன்னும் கவலைப்படாதீங்க…. நல்லவங்கள மழை ஒன்றும் செய்யாதாம்

    Like

  5. கலை

    //ஒன்னும் கவலைப்படாதீங்க…. நல்லவங்கள மழை ஒன்றும் செய்யாதாம்//
    🙂

    //கலை கொஞ்சம் நம்ம ஊரு பக்கம் வந்துட்டுப் போங்க மழையே பெய்ய மாட்டேங்குதாம்//

    😦 ஒரு கொசுறு (மேலதிக) தகவல்… இங்கே இன்றைக்கு சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதுதாங்க, வெயில்.

    Like

  6. வீ. எம்

    சீப் ரேட்ல ஒரு படகு இருக்கு கலை, வேனுங்களா??
    பதிவு மழையில் நனைந்தது போல் இருந்தது, இதமாக..
    உங்களுக்கு பனிகட்டில நடக்கற மாதிரி இருக்கா ?? 🙂

    Like

  7. Dharumi

    “தருமி..கேள்வி கேட்பதன்றி வேறொன்றும் அறியீரோ?? :O) – ஷ்ரேயா–மசாலா கொஞ்சம் கொறஞ்ச கேசுகள் எல்லாம் எப்பவுமே அப்படித்தானே; அதை வேறு குத்தி குத்திக் காண்பிக்கணுமா?

    Like

  8. வீ. எம்

    ????????????????? missing????????????

    Like

  9. dwainjackson38658148

    i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

    Like

  10. றெனிநிமல்

    ஹி ஹி ஹி…..
    நல்ல விதமான அரட்டை!

    Like

Dharumi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி