நிலாச்சோறு!!!

Posted On செப்ரெம்பர் 2, 2005

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped 13 responses

பால் நிலா.. அங்கே
பகிர்ந்துண்ட உணவு

அம்மாவின் கையால்
ஆசையாய் நிலாச்சோறு
அன்பினையும் பகிர்ந்து
ஆவலுடன் உண்டோம்….

அது மட்டுமா?

போர்க் காலச் சூழலிலும்… அதே
பால் நிலாத்தான்.. ஆனாலும்
பகிர்ந்துண்ட உணவு
பாரமாய் மனத்திரையில்…

மனைகளுக்கு
மின்சாரமில்லை
மண்ணெண்ணை விலையிலோ
மலை போன்ற உயர்வு
வீட்டிற்குள்
விளக்குமில்லை
வெளிச்சமுமில்லை

ஆதலால் நமக்கு
நிலாச்சோறு
கட்டாயமானது…

13 Responses to “நிலாச்சோறு!!!”

 1. `மழை` ஷ்ரேயா(Shreya)

  மனைகளுக்கு மட்டுமா வெளிச்சமில்லை?

 2. கலை

  உண்மைதான் ஷ்ரேயா. மனைகளில் மட்டுமில்லை, மனங்களிலும்தான் வெளிச்சமில்லை.

 3. Go.Ganesh

  // ஆதலால் நமக்கு நிலாச்சோறு கட்டாயமானது…//
  ஒரு டயலாக் ஞாபகம் வந்தது. வெளிநாட்டுக்காரன் நிலாவில கால் வச்சப்புறமும் கூட நாம நிலா சோறு தான் ஊட்டிக்கிட்டு இருக்கோம். ரெண்டு விஷயம் புலனாச்சு. வெளிநாட்டுக்காரன் செல்வச்செழிப்பில இருக்கான். நம்மாளுங்களுக்கு கற்பனை அதிகம். ஆனா பாருங்க உங்க கவிதையைப் படிச்சப்புறம் தான் புரிஞ்சுது நம்மாளுங்க கற்பனை திணிக்கப்பட்ட ஒன்று.

 4. திரு

  கலை,

  கவிதைகள் அனைத்தும் அருமை! அனுபவமே கவிதை! யுத்தகால நினைவுகளை உணர்வுமிக்க வரிகளில்…வாழ்த்துகள்

  அன்புடன்
  திரு

 5. கலை

  நன்றிகள் கணேஷ், திரு.

 6. Dharumi

  “போர்க் காலச் சூழலிலும்… அதே
  பால் நிலாத்தான்.. ஆனாலும்
  பகிர்ந்துண்ட உணவு
  பாரமாய் மனத்திரையில்…”

  இந்த வரிகளையும், இன்னும் ஸ்றீரங்கன் அவர்களது(கலை/மதி பதிவுகளில் எழுதிய) பின்னூட்டத்தையும் தொடர்ந்து படித்ததாலோ என்னவோ மனசுக்கு ரொம்பவே கஷ்டமாயிருக்கு.

 7. ரவிசங்கர்

  யுத்த பாதிப்பின் வலியை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது..ஹ்ம்ம்..சீக்கிரம் விடிவு பிறக்கட்டும்

 8. கயல்விழி

  நாம் காவோலையில் நெருப்பெரித்து. மாலை நேர பணிகளை முடிந்த நினைவு நினைவிற்கு வருகிறது. :((

 9. கலை

  நன்றிகள் தருமி, ரவிசங்கர், கயல்விழி.

 10. றெனிநிமல்

  போர் சிதைவுகளை பார்க்கும் போது, மனம் ஒடிந்து போவதைப் போன்ற ஓர் பிரமை. உங்கள் கவிதையை காண்கின்ற போது!

 11. கலை

  நன்றி றெனிநிமல். மீண்டும் இது போன்ற, வலுக்கட்டாயமாக நிலாச் சோறு உண்ணும் நிலமை எவருக்கும் வரகூடாது என்று மனம் வேண்டிக் கொள்கிறது.

 12. யாழ்_அகத்தியன்

  மனைகளுக்கு
  மின்சாரமில்லை
  மண்ணெண்ணை விலையிலோ
  மலை போன்ற உயர்வு
  வீட்டிற்குள்
  விளக்குமில்லை
  வெளிச்சமுமில்லை

  ஆதலால் நமக்கு
  நிலாச்சோறு
  கட்டாயமானது…

  உணர்வுமிக்க வரிகளில்…வாழ்த்துகள்

 13. கலை

  நன்றி காண்டீபன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s