சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

Posted On ஓகஸ்ட் 26, 2005

Filed under புதிர்

Comments Dropped 14 responses

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. “நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்” அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ அப்படின்னு நினைச்சு, என்னைப்போலவே ஒரு சிலராவது, அட்லீஸ்ட் ஒரு சில நிமிஷமாவது குழம்பிப் போக மாட்டாங்களான்னு ஒரு சின்ன நப்பாசையோடவும், நல்லெண்ணத்தோடவும் இதை இங்க புளொக்ல போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

இந்த கேள்வி பார்த்ததும் ‘இதெல்லாம் ஒரு கேள்வியா’ அப்படின்னு திட்டுறவங்க பதிலே சொல்லாமே போயிடுங்க (பப்ளிக்கா நான் திட்டு வாங்கிட கூடாதில்லையா, அதுதான்). அப்புறம், கொஞ்ச நேரமாவது குழம்பி போறவங்க, தயவு செய்து ஒரு பதில் போட்டுட்டு போயிடுங்க. (எனக்கும் கொஞ்சம் திருப்தி வேணுமில்லையா?). கொஞ்ச நேரம் குழம்பிப்போனாலும், அதை இங்க பப்ளிக்கில காட்டிக்க விருப்பமில்லாதவங்க, அட்லீஸ்ட் அந்த நட்சத்திரத்துலே ஒரு குத்து வைத்து, மத்தவங்களுக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்துட்டு போங்க (எனக்கு இருக்கிற அந்த நல்லெண்ணம் உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன், ஹி ஹி, இன்னும் ஒரு சிலரை சேத்து குழப்பலாமே?).

“எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன?” அப்படின்னு கூக்குரல் எல்லாம் வருதுபோல இருக்கு. கேள்வி கடைசியாத்தான் வரும். அதுக்கு முன்னாலே ஒரு சின்ன கதை வருது, இருங்க.

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க ‘அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா’ அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்… நான் எங்கே விட்டேன், ஆஆ… அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், ‘அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே’ அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, “இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா” அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.

சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.

என்ன? கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க
ணக்கு மாதிரி இருக்கா? இல்லையே அப்படின்னு சொல்லுறீங்களா? அப்போ பதிலை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்.

14 Responses to “சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!”

 1. `மழை` ஷ்ரேயா(Shreya)

  இதே கேள்வியை யாரோ வலைப்பதிவில கேட்டு பதிலும் கிடைச்சிருந்தது. நான் தான் மறந்திட்டன். :O)

 2. கலை

  ஒருவருக்குமே (எனக்கு மாதிரி) குழப்பம் வரவில்லையோ என்று கவலைப்பட்டேன். எனக்கு முதல் ஏற்கனவே வலைப்பதிவில் யாரோ குழப்பி விட்டார்களா? அப்ப சரி. :))

 3. Go.Ganesh

  அட போங்க….

 4. Voice on Wings

  எனக்கு முன்பு குழப்பியவரைக் குறித்து (சத்தியமாகத்) தெரியாது. இது நானே குழம்பிப் போய், பிறகு தெளிந்ததால் பிறந்த விடை 🙂

  சுப்பனும் குப்பனும் செலவிட்ட பணம் – ரூ.47/- இதிலிருந்து முதலாளி பெற்றுக் கொண்டது ரூ.45/-, கந்தன் லவுட்டிக் கொண்டது ரூ.2/-. கணக்கு சரியாகத்தானே உள்ளது? ரூ.50/- எங்கிருந்து வந்தது, திருவாளர் குழப்பவாதி அவர்களே?

 5. கலை

  நானும் இதே மாதிரித்தான் என்னிடம் கேள்வி கேட்டவரிடம் பல முறைகளில் கணக்கை சரி பண்ணிக் காட்டினேன். அதற்கு அவரோ ஒரே பிடியாக, “நான் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டும். வேறு கணக்கெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று பிடிவாதம் பிடித்தார். அவர் என்னை நேரடியாக பதில் சொல்லும்படி கேட்ட கேள்வி “அப்பனும் சுப்பனும் ஆளுக்கு 25 ரூபா கொடுத்தார்கள். அவர்களுக்கு 1.50 ஒவ்வொருவருக்கும் திருப்பிக் கிடைத்தது. எனவே அவர்கள் ஒவ்வொருவரும் செலவு செய்திருப்பது 23.50 ரூபா. மொத்தமாக 47 ரூபா. கந்தன் எடுத்தது 2 ரூபா. அப்போ மிச்சம் ஒரு ரூபா எங்கே”. பிறகு என்ன கொஞ்சம் குழம்பி, கொஞ்சம் மூளையைக் கசக்கி விட்டு, “நீங்கள் கேட்ட கேள்வியே தவறு” என்று சொல்லி விட்டேன்.
  “அப்பனும் சுப்பனும் செலவு செய்த பணம்தானே 47 (23.50 + 23.50) ரூபா. அந்த செலவு செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது? முதலாளியிடம் 45 (22.50 + 22.50) ரூபாவும், கந்தனிடம் 2 (1 + 1) ரூபாவும்தானே? அவர்கள் செலவு செய்திருக்கும் பணத்தின் ஒரு பகுதிதானே கந்தன் வைத்திருப்பது. அப்படியானால் அந்த செலவு செய்த 47 ரூபாவுக்குள்தானே அந்த 2 ரூபாவும் அடக்கம். எனவே அவை இரண்டையும் கூட்டிப் பார்க்க முடியாதுதானே? எனவே அந்தக் கேள்வி பிழையானது.”

 6. வீ. எம்

  குழப்பிட்டீங்களே கலை.. யோசித்து யோசித்து பாக்கறேன்..விடை தெரியலயே.. வலைப்பூவுல வந்தது பற்றி தெரியாது..ஆனா ஒரு படத்துல வந்திருக்கு இது.. வடிவேலு படத்துல.. இங்கே ஆடு ..அங்கே கோழி.. !

  ஆடு வாங்க கொடுத்தது – 45
  பிரிச்சு எடுத்துக்கிட்டது – 3 (1.5 + 1.5)
  கந்தன் எடுத்துகிட்டது – 2

  ஆக மொத்தம் 50 ரூ ,

 7. கயல்விழி

  இதற்கு பதில் பார்த்திபன் ஏதோ படத்தில சொன்ன நினைவு இருக்கு.

  வேறை யாரோ நமக்கு சொன்னவங்க பொறுங்க நினைவு படுத்திப்பாக்கிறன். உங்களுக்கு வெற்றி தான் கலை. 🙂

 8. கலை

  வீ.எம், கயல்விழி, இங்கே வருகை தந்து கொஞ்சம் குழம்பிப் போனதுக்கு நன்றிகள், ஹி ஹி. ஆனால் மேலே உள்ள எனது பின்னூட்டத்தில்தான் ஏற்கனவே பதில் எழுதி விட்டேனே, கவனிக்கவில்லையா நீங்க ரெண்டு பேரும்?

  “அப்பனும் சுப்பனும் செலவு செய்த பணம்தானே 47 (23.50 + 23.50) ரூபா. அந்த செலவு செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது? முதலாளியிடம் 45 (22.50 + 22.50) ரூபாவும், கந்தனிடம் 2 (1 + 1) ரூபாவும்தானே? அவர்கள் செலவு செய்திருக்கும் பணத்தின் ஒரு பகுதிதானே கந்தன் வைத்திருப்பது. அப்படியானால் அந்த செலவு செய்த 47 ரூபாவுக்குள்தானே அந்த 2 ரூபாவும் அடக்கம். எனவே அவை இரண்டையும் கூட்டிப் பார்க்க முடியாதுதானே? எனவே அந்தக் கேள்வி பிழையானது.”

 9. அதிரைக்காரன்

  அ(டி)டப்பாவிங்களா,

  ரெண்டு மாசத்துக்கு முன்னால இதை கொஞ்சம் மாத்திப் பதிந்திருந்தேன். ஆனா நீங்க கடிகாரத்தை குட்டி ஆடாக மாத்தீட்டீங்க.

  ஆட்டைக் கழுதையாக்கிய அதிராம்பட்டினத்தாரை விட கடிகாரத்தை குட்டி ஆடாக்கிய கலை எவ்வளவோ பரவாயில்லை.

 10. கலை

  வணக்கம் அதிரைக்காரன்!

  உண்மையிலேயே நீங்கள் முன்னர் இந்தக் கணக்கு இங்கே வலைப்பதிவில் போட்டிருந்தது எனக்குத் தெரியாது. என்னிடம் ஒருவர் நேரில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேட்ட கேள்வியையே, கொஞ்சம் சுவாரசியமாக்கி (??) எழுதி இருந்தேன். அதற்கு ஷ்ரேயா அவர்கள் எழுதிய பின்னூட்டத்தையும், அதற்கு நான் எழுதிய பதிலையும் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். ஷ்ரேயாவுக்கும் யார் அந்த கேள்வியைப் போட்டார்கள் என்பது சரியாக தெரியாது. எனது பதிவில் பின்னூட்டம் இட்ட மற்றவர்களும் உங்களது பதிவைப் பார்க்கவில்லைப் போலுள்ளது. அதனால்தான், எனக்கு உங்களுடைய பதிவைப் பார்க்க முடியாமல் போனது. என்னிடம் கேள்வி கேட்டவர் ஆட்டுக் குட்டியை வைத்துத்தான் கதை சொல்லி இருந்தார். மற்ற பெயர்கள்தான் நானாக போட்டுக் கொண்டது. உண்மையிலேயே, உங்களுடைய பதிவை மாற்றி எனது பதிவை நான் இடவில்லை. தயவு செய்து புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 11. அதிரைக்காரன்

  //உண்மையிலேயே, உங்களுடைய பதிவை மாற்றி எனது பதிவை நான் இடவில்லை. தயவு செய்து புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்//

  இதெல்லாம் சகஜம் கலையரசி.ஒரே சிந்தனை அல்லது கற்பனை பலருக்கு வருவதில் ஆச்சரியமில்லை. (ஆங்கில சினிமாவை காப்பியடிக்கும் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் இதைச் சொல்லிதான் சமாளிப்பார்கள்!)

  அதெல்லாம் சரி, எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி ரூ.50 க்குள் கிடைத்தால் கொரியரில் அனுப்பி வைக்கமுடியுமா?

  :-)))

 12. கலை

  இந்த கேள்வியில் எனது சிந்தனையோ, கற்பனையோ எதுவுமே இல்லை. :)என்னை இந்தக் கேள்வி கேட்டவரோட கற்பனையும்கூட இல்லை. காரணம் அவருக்கே சரியா பதில் சொல்லத் தெரியலை. :)) அவர் வலைப்பூக்கள் பார்ப்பவரும் இல்லை. ஒருவேளை உங்கள் வலைபூவைப் பார்த்த வேறு யாராவது அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்களா தெரியவில்லை.

 13. நளாயினி

  நானும் என்னவோ ஏதோ எண்டு நினைச்சு வாசிச்சன் 10 நிமிசம் வேஸ்ட:.

 14. திரு

  கலை, பதிவுகள் பார்த்தேன்! அருமையாக உள்ளது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s