சும்மா சும்மா!

எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது… இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை.

அதுல நிறைய விஷயங்கள் சும்மா எதுவுமே இல்லாத, உப்புச் சப்பில்லாத விஷயங்கள். ஆனாலும் எழுத வேணும் என்று தோன்றும். சரி, அதை எல்லாம் என்னிடம் இருக்கும் வலைப்பதிவுகளில் எதில் போடலாம் என்று மண்டையைக் கசக்கி யோசிச்சுப் பாத்தன். எதுலயுமே போட ஏலாது என்றுதான் மனதுக்கு படுகுது. அதுனால, இந்த ‘சும்மா சும்மா’ வலைப் பதிவை தொடங்கியிட்டன் (கஷ்ட காலம்).

இனி ஏதாவது எனக்கு மனசில வாற சும்மா சும்மா விஷயம் எல்லாம், நேரமும் ஒத்துழைத்தால் இங்கே, இந்தப் பதிவிலே விழுந்து கிடக்கும்.

Advertisements

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in கிறுக்கல்கள். Bookmark the permalink.

4 Responses to சும்மா சும்மா!

  1. மதி கந்தசாமி (Mathy) சொல்கிறார்:

    வாங்க வாங்க. உங்களின் ‘சும்மா சும்மா’ ரொம்ப சுவாரசியமாக இருக்கு.

    -மதி

  2. Agent 8860336 ஞான்ஸ் சொல்கிறார்:

    உப்புச் சப்பில்லாத பதிவு
    ரொம்ப சுவராசியமாக இருக்கிறது!

    நா நெசமாத்தாங்க சொல்றேன்…
    :-)))

  3. கலை சொல்கிறார்:

    நன்றிகள் ஞானபீடம் அவர்களுக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும். அடடே, அப்படின்னா, அடிக்கடி இந்த உப்பு சப்பில்லாத விஷயமெல்லாம் இங்கே கொண்டு வந்து கொட்டலாம் ன்னு சொல்லுறீங்க. 🙂

  4. Agent 8860336 ஞான்ஸ் சொல்கிறார்:

    ஓ தாராளமா,

    எல்லாம் இங்கே படிக்கப்படும்;
    என்ன ஒன்னு பின்னூட்டம் இட்டா கெத்து கொறஞ்சுடும்னு பலபேரு பின்னூட்டம் மட்டும் இடமாட்டாங்களே தவிர, மற்றபடி படிச்சே தீருவாங்க எல்லாரும்!

    ஒரு Hit Counter போட்டுப் பாருங்க எவ்ளோ Hit கெடக்கிதுன்னு!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s