எனது ஞாயிறு!!

Posted On ஓகஸ்ட் 17, 2005

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped 8 responses

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. “இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்” என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?).

காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் அனுப்பி விட்டு, கணினிக்கு போக முயன்றபோதுதான் பார்த்தேன், மகளுடைய புத்தக மேசை கொஞ்சம் அலங்கோலமாய் இருந்தது. சரி அதை அடுக்கி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வேலையை ஆரம்பித்தேன். அதை அடுக்கிக் கொண்டு போனபோது பார்த்தால் அங்கே சூரியகாந்தி விதைகள் இருந்த ஒரு சின்னப் பை இருந்தது. அடடா, இதை இந்த சம்மருக்கு முளைக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேனே, இது எப்படி இங்கே வந்தது (வேறு எப்படி, வழக்கம்போல் மகளுடைய வேலைதான்), இன்னும் வேறு சில தாவர விதைகளும் வைத்திருந்தோமே என்று நினைத்துக் கொண்டே அவற்றை தேட ஆரம்பித்தேன். அதை தேடிக் கொண்டு போகும்போது கிச்சின் லே ஒரு ஒரு drawer க்குள்ளே இருந்தது. அதை எடுக்கலாம் என்று போனால், அதற்குள் தேவையே இல்லாத பல பொருட்கள். இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டே அதை கிளீன் பண்ண தொடங்கினேன். அதற்குள் book shelf இல் வைக்க வேண்டிய பொருட்களும் சேர்ந்து இருந்தது. சரி அவற்றை எடுத்துக் கொண்டு book shelf பக்கம் போனேனா, அங்கேயும் மீள அடுக்க வேண்டியவாறு நிலமை.

பிறகென்ன, book shelf அடுக்கி வைத்து விட்டு, மீண்டும் கிச்சனுக்கு வந்து drawer எல்லாம் கிளீன் பண்ணி அடுக்கி வைத்து, பிறகு மகளுடைய மேசைக்கு வந்து, அதெல்லாம் அடுக்கி முடித்து…….. அப்பாடா, நேரமும் போய்விட்டது. இனி என்ன சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தான் நேரமிருந்தது.

நான், என்னை ரொம்ப சிஸ்டமட்டிக் ஆன ஆள் என்று நினைத்திருந்தேனே. இவ்வளவுதானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பி.கு. மகளின் மேசையைப் பார்க்கும்போது, நான் சிறு வயதில் வைத்திருந்த ஒரு மேசை நினைவுக்கு வருகிறது. அதுபற்றியும் எழுத வேணும்.

8 Responses to “எனது ஞாயிறு!!”

 1. .

  Converting one off visitors
  Keeping one off visitors is a perinial problem with all serious blogs, serious as in they look for regular visitors as opposed to search engine traffic only.
  My Acne Recourses site, covers Acne Recourses related stuff.

 2. Boston Bala

  பார்த்திபன் கனவு திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்: “வச்சது வச்சபடி ஒழுங்கா இருக்கா இது என்ன மியுஸியமா?”

  உன்னுடைய இடம் குப்பை மாதிரி இருக்கிறது என்று யாராவது சொன்னால், நான் தப்பித்துக் கொள்வது இந்த டயலாக்கில்தான் 🙂

 3. Agent 8860336 ஞான்ஸ்

  Boston Bala, கில்லி படத்துல நம்ம விஜய் கூட இப்டி ஒரு டயலாக் உடுவாரு:
  “அடுக்கி வெச்சா அடகு கடை
  எறஞ்சு கெடந்தாத்தான் வீடு”

 4. பரணீ

  அட .. Bergen .. உங்க ஊருக்கு மூன்றுமுறை வந்திருக்கேனே.

 5. `மழை` ஷ்ரேயா(Shreya)

  //வச்சது வச்சபடி ஒழுங்கா இருக்கா இது என்ன மியுஸியமா//

  I wish this dialodue was available when I was a teenager! could’ve told amma!! ;O)

 6. நிலவு நண்பன்

  எழுதுவதற்கு ஒண்ணுமில்லைனா ஞாயிற்றுக்கிழமை பற்றி கூட எழுதுறீங்களே..நன்றாக இருந்தது. அப்படியே திங்கள் – செவ்வாய் – புதன் – வியாழன்..அப்படின்னு தொடரவேண்டியதுதானே..?

  இதயம் நெகிழ்வுடன்

  ரசிகவ் ஞானியார்

 7. தமிழ்நதி

  எல்லாம் வைத்தது வைத்த இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு போய் எடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற ‘ஒழுங்கு’ப் பைத்தியம் எனக்கும் உண்டு. ஆனால், நாளடைவில் அதில் ஒரு களைப்பு வந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன். இருந்தும் திருந்த முடியவில்லை. ஒரு நாள் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுக்கொண்டு, பகலெல்லாம் உறங்கிக்கொண்டு குற்றவுணர்வில்லாமல் இருக்க ஆசை. இந்த ‘ஒழுங்கற்ற’ஆசை எப்போதுதான் நிறைவேறுமோ…?

  கலை!பின்னூட்டமிடுபவர்களின் பெயர்களில் பூச்சி பறக்கிறது. பார்த்து சரிசெய்யுங்கள்.
  -தமிழ்நதி

 8. கலை

  நன்றி தமிழ்நதி. பூச்சியை மாற்ற முடியவில்லை, பிறகு பார்க்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s