உன் கை பிடித்து……

Posted On ஓகஸ்ட் 5, 2005

Filed under கிறுக்கல்கள்

Comments Dropped one response


உன் கை பிடித்து
நான் எழுந்து
என் முதலடியை
எடுத்து வைத்தேன்
உன் கைகள்
எந்தனுக்குசெய்துவிட்ட
சேவைகளோ ஏராளம்

விளையாடிக் களைத்து நான்
வியர்வையில் குளித்து வந்தால்
முந்தானை எடுத்து என்
முகம் துடைத்தாய்
மழையில் நனைந்து வந்தால்
மார்பில் சளி பிடிக்குமென்று
தாயே நீ ஓடி வந்து
தலை துடைத்தாய்
நான் விரும்பும் இடமெல்லாம்
நாளும் நீ அலுக்காமல்
அன்பாய் அரவணைத்து
அழைத்துச் செல்வாய்

காயங்கள் எனக்கு வந்தால்
கருத்துடனே மருந்திடுவாய்
வாடாமல் நான் நின்றாலும்
வலி தெரியும் உன் முகத்தில்

என் கை பிடித்து
ஏட்டில் நீ எழுத வைத்தாய்
என் கரம்பற்றும் கணவரிடம்
ஏக்கமுடம் அனுப்பி வைத்தாய்

உன் கைகள் எந்தனுக்கு
செய்துவிட்ட சேவைகளோ ஏராளம்
நான் உனக்கு சேவை செய்யும்
சந்தர்ப்பம் வந்திடுமா????

 

One Response to “உன் கை பிடித்து……”

  1. `மழை` ஷ்ரேயா(Shreya)

    இந்தக் கிழமை கனபேருக்கு பெற்றோரைப் பற்றின எண்ணங்கள் போல் இருக்கு.

    //என் கரம்பற்றும் கணவரிடம்
    ஏக்கமுடம் அனுப்பி வைத்தாய்//

    தொலைபேசியில கதைக்கும் போது, “என் வீட்டில் கேட்க வேண்டிய சிரிப்பு உம்மட வீட்டில் கேட்குது” என்று அம்மா என் கணவரிடம் சொல்லும் போது மனதை என்னவோ செய்யும். :O|

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s