Monthly Archives: ஓகஸ்ட் 2005

சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. “நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்” அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக … Continue reading

Posted in புதிர் | 14 பின்னூட்டங்கள்

முயற்சி செய்!!

ஒளி தெரியும் வானமது தொலைவில்தான் ஆனாலும் வானத்தை, தொட்டு விட முயற்சி செய்… எழில் மிகுந்த மலைமுகடும் உயரத்தில்தான் ஆனாலும் உச்சியை, எட்டிவிட முயற்சி செய்…

Posted in கிறுக்கல்கள், சமூகம் | 6 பின்னூட்டங்கள்

கண்ணீர்ப்பூக்கள்!!

போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும். நிறைய … Continue reading

Posted in குழந்தை, சமூகம், திரைப்படம், ரசித்தவை | 7 பின்னூட்டங்கள்

எனது ஞாயிறு!!

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. “இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்” என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?). காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் … Continue reading

Posted in கிறுக்கல்கள் | 8 பின்னூட்டங்கள்

நடைப்பயணம்!

என்னது நடைப்பயணமா? ஏதாவது போராட்டமா? இல்லை. போராட்டமும் இல்லை, ஒரு மண்ணுமில்லை. அப்போ ஏதாவது வேண்டுதலா? இல்லையே, எந்த வேண்டுதலும் இல்லை. இந்த நடைப்பயணம் எனக்காக நானே மேற்கொண்டது. எந்த தேசத்துக்கு? எந்த தேசத்துக்குமில்லைங்க. எனது வீட்டிலிருந்து வேலைக்கு தினமும் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன். பூ இவ்வளவுதானா? அவ்வளவேதான். இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? சரி சரி, … Continue reading

Posted in கிறுக்கல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

சும்மா சும்மா!

எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது… இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை. அதுல நிறைய விஷயங்கள் … Continue reading

Posted in கிறுக்கல்கள் | 4 பின்னூட்டங்கள்

தடையங்கள்!!!

கடலோர புதை மணலில் அதோ சிலகால் சுவடுகள், பெண் அவள் மனதில் அவன் விட்டுப் போன பாரமான தடையங்கள் அழியாமல், ஆரவாரமாய் எழப்போகும் கடல் நீர் அழித்துவிடும் கால் சுவடுகளை, ஆனால் அவள் நெஞ்சின் தடையங்கள் அழியுமா இவ்வாழ்வில்???

Posted in கிறுக்கல்கள் | 5 பின்னூட்டங்கள்

உன் கை பிடித்து……

உன் கை பிடித்து நான் எழுந்து என் முதலடியை எடுத்து வைத்தேன் உன் கைகள் எந்தனுக்குசெய்துவிட்ட சேவைகளோ ஏராளம் விளையாடிக் களைத்து நான் வியர்வையில் குளித்து வந்தால் முந்தானை எடுத்து என் முகம் துடைத்தாய்மழையில் நனைந்து வந்தால் மார்பில் சளி பிடிக்குமென்று தாயே நீ ஓடி வந்து தலை துடைத்தாய்நான் விரும்பும் இடமெல்லாம் நாளும் நீ … Continue reading

Posted in கிறுக்கல்கள் | 1 பின்னூட்டம்