Category Archives: படங்கள்

வீட்டிற்கான வழி!

The Way Home நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன். கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு … Continue reading

Posted in அன்பு, உணர்வுகள், படங்கள், பாசம், வாழ்க்கை, human nature, Kids world, life, The Way home | 6 மறுமொழிகள்

அழகோ அழகு!

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக … Continue reading

Posted in அழகு, நிகழ்வுகள், நோர்வே, படங்கள், uncategorized | 1 மறுமொழி

இது ஒரு பனிக்காலம்!

இது ஒரு அழகான பனிக்காலம்! நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது. அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் … Continue reading

Posted in அழகு, நோர்வே, படங்கள், ரசித்தவை | 7 மறுமொழிகள்

எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!

எரியும் நினைவுகள்! எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன். நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, … Continue reading

Posted in அறிமுகம், இலங்கை, சமூகம், படங்கள் | மறுமொழியவும்

இலையுதிர்காலம்!!

இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே ((( கீழே….. இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.

Posted in அழகு, படங்கள் | 4 மறுமொழிகள்