Category Archives: நோர்வே

அழகோ அழகு!

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக … Continue reading

Posted in அழகு, நிகழ்வுகள், நோர்வே, படங்கள், uncategorized | 1 மறுமொழி

இது ஒரு பனிக்காலம்!

இது ஒரு அழகான பனிக்காலம்! நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது. அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் … Continue reading

Posted in அழகு, நோர்வே, படங்கள், ரசித்தவை | 7 மறுமொழிகள்

பகல் ராத்திரி!

நோர்வே – 8 நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் … Continue reading

Posted in நிகழ்வுகள், நோர்வே | மறுமொழியவும்

நாடு நல்ல நாடு – நோர்வே 7

நோர்வே – 7! நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது . நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. … Continue reading

Posted in உலகம், நோர்வே | 2 மறுமொழிகள்

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக … Continue reading

Posted in உலகம், நிகழ்வுகள், நோர்வே | 1 மறுமொழி