கருவிப்பட்டை கேள்வி!
பதிந்தவர் கலை மேல் ஜனவரி 19, 2006
முடிந்தால் உதவுங்கள்!
எனது வலைப்பதிவுகளில் நான் இந்த கருவிப்பட்டையை இணைத்து விட்டேன். ஒவ்வொரு தனித்தனி பதிவுகளாக எடுத்துப் பார்க்கும்போது (உதாரணமாக> இந்த ‘கருவிப்பட்டை கேள்வி!’ என்ற தலைப்பில் click பண்ணி open பண்ணும்போது) , கருவிப்பட்டையானது பதிவுகளின் தொடக்கத்தில் தெரிகிறது. ஆனால், வலைப் பதிவை முழுமையாக எடுத்துப் பார்க்கும்போது(உதாரணம்> ‘கலை’ என்பதில் அல்லது ‘சும்மா சும்மா’ வில் click பண்ணி open பண்ணும்போது), பதிவுகளில் கருவிப்பட்டையைக் காணோம். ஏன் இது? இதை நிவர்த்தி செய்யும் வழி ஏதாவது உண்டா?
கலை







ஜோ / Joe சொன்னார்
உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அப்படித் தான் இருக்கிறாது என நினைக்கிறேன்..மன்றத்தில் இந்த கேள்வியை எழுப்பி உதவி கேட்கலாம் என நினைக்கிறேன்
காசி (Kasi) சொன்னார்
இல்லை. அது அப்படி இருக்கத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல நுட்பக்காரணங்களால் இது தேவையாக இருக்கிறது.
கலை சொன்னார்
உடன் பதில் தந்தமைக்கு நன்றி காசி. (அப்பாடா எனக்கு மட்டுமில்லை இது, ஹி ஹி)
கொழுவி சொன்னார்
‘பட்டை’ என்ற சொல்லோடு எந்தப் பதிவு வந்தாலும் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்க விட்டுக் காத்திப்பாரோ காசி?
பலர் ஒரே பிரச்சினையைத்தான் திருப்பத் திருப்பக் கேட்கிறார்களென்று படுகிறது.
Kanags சொன்னார்
என்னுடைய ‘பட்டை’ப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
//’பட்டை’ என்ற சொல்லோடு எந்தப் பதிவு வந்தாலும் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்க விட்டுக் காத்திப்பாரோ காசி?
//
காசி அண்ணையும் கைவிரித்து விட்டார்.
காசி (Kasi) சொன்னார்
//Kanags said…
என்னுடைய ‘பட்டை’ப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.//
இதைப் பாத்தா சரியாயில்ல இருக்கு.
Kanags சொன்னார்
நன்றி காசி. ஆஹா எவ்வளவு அழகாக இருக்கு. ஆனா…இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமில்லை, பலருக்கு இருப்பதாகத் தெரிகின்றது. (atleast வசந்தனுக்கு இருப்பது தெரியும், ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை). அதாவது உங்களின் கணணியில் தெரிகின்றது, என்னுடைய கணணியில் மட்டும் தெரியவில்லை. என்னுடைய பட்டை மட்டுமல்ல எவருடைய பட்டையும் தெரியவில்லை. இதுதான் பிரச்சினை. என்னுடைய கணணியில் settingஇல் ஏதாவது செய்யவேண்டுமா?
காசி (Kasi) சொன்னார்
Please enable javascript function in your browser. That could have been disabled. See here:
http://www.chami.com/tips/internet/021398I.html