உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

ஜனவரி, 2006 க்கான தொகுப்பு

முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்.

பதிந்தவர் கலை மேல் ஜனவரி 25, 2006

1. ஐந்துக்கும் ஒன்பதுக்குமிடையிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை தெரிவு செய்யுங்கள்.
2. அதிலிருந்து ஐந்தைக் கழித்துக் கொள்ளுங்கள்.
3. வரும் எண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ளுங்கள்.
4. இங்கே கிடைக்கும் எண்ணை, அதே எண்ணால் பெருக்கிக் கொள்ளுங்கள். அதாவது வர்க்கம் எடுங்கள்.
5. கிடைத்த எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்கள் இருப்பின், அவற்றை ஒரு இலக்கமாக வரும்வரை கூட்டிக் கொள்ளுங்கள். (உ.ம். 64: 6 + 4 = 10; 1 + 0= 1)
6. இந்த எண் ஐந்தை விட அதிகமானதாக இருந்தால், அதிலிருந்து 5 ஐ கழித்துக் கொள்ளுங்கள். ஐந்தை விடக் குறைவானதாக் இருந்தால், 5 ஐ கூட்டிக் கொள்ளுங்கள்.
7. வரும் எண்ணை மீண்டும் 2 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.
8. இப்போது வரும் எண்ணிலிருந்து 6 ஐ கழித்துக் கொள்ளுங்கள்.
9. இங்கே வரும் எண்ணுக்கு ஒழுங்கிலுள்ள ஆங்கில எழுத்தை தெரிவு செய்யுங்கள். (உ.ம். 1=A, 2=B, 3=C, 4=D…26=Z, etc)
10. அந்த ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு நாட்டின் பெயரை நினையுங்கள்.
11. இந்த பெயரில் வரும் இரண்டாவது எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு மிருகத்தின் பெயர் நினையுங்கள்.
12. அந்த மிருகத்தின் மிகப் பொதுவான நிறத்தை நினையுங்கள்.

நீங்கள் நினைத்த நாடு டென்மார்க், மிருகம் யானை, நிறம் சாம்பல் ஆக இருந்தால், நீங்கள் 90% க்கு மேற்பட்ட மனிதர்களைப் போலவே சிந்திக்கிறீர்கள்.

இங்கே வந்து பார்த்து முயற்சி செய்தவர்கள், நீங்கள் நினைத்தவை எவை என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்.

.... இங்கே பதியப்பட்டது புதிர் | 4 மறுமொழிகள் »

கருவிப்பட்டை கேள்வி!

பதிந்தவர் கலை மேல் ஜனவரி 19, 2006

முடிந்தால் உதவுங்கள்!

எனது வலைப்பதிவுகளில் நான் இந்த கருவிப்பட்டையை இணைத்து விட்டேன். ஒவ்வொரு தனித்தனி பதிவுகளாக எடுத்துப் பார்க்கும்போது (உதாரணமாக> இந்த ‘கருவிப்பட்டை கேள்வி!’ என்ற தலைப்பில் click பண்ணி open பண்ணும்போது) , கருவிப்பட்டையானது பதிவுகளின் தொடக்கத்தில் தெரிகிறது. ஆனால், வலைப் பதிவை முழுமையாக எடுத்துப் பார்க்கும்போது(உதாரணம்> ‘கலை’ என்பதில் அல்லது ‘சும்மா சும்மா’ வில் click பண்ணி open பண்ணும்போது), பதிவுகளில் கருவிப்பட்டையைக் காணோம். ஏன் இது? இதை நிவர்த்தி செய்யும் வழி ஏதாவது உண்டா?

கலை

.... இங்கே பதியப்பட்டது uncategorized | 8 மறுமொழிகள் »

என் குட்டித் தேவதைக்கு….

பதிந்தவர் கலை மேல் ஜனவரி 18, 2006

என் குட்டித் தேவதைக்கு….

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…
பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…
இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்

.... இங்கே பதியப்பட்டது கவிதை, குழந்தை, ரசித்தவை | 10 மறுமொழிகள் »

சில முத்துக்கள்!

பதிந்தவர் கலை மேல் ஜனவரி 18, 2006

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!


> உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!

> தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது

> அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

.... இங்கே பதியப்பட்டது கவிதை, சமூகம், ரசித்தவை, வாழ்க்கை | Leave a Comment »

புதிய வனத்தில் பரீட்சார்த்த பதிவு!

பதிந்தவர் கலை மேல் ஜனவரி 17, 2006

நந்தவனத்தில் அல்லது புதிய தமிழ்மணத்தில் எனது புதிய பரீட்சார்த்த பதிவை இடுகிறேன். பதிவு கருவிப்பட்டை வேலை செய்கிறதா என்று பார்க்கத்தான் இந்த பதிவு.

.... இங்கே பதியப்பட்டது uncategorized | Leave a Comment »