உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

ஆகஸ்ட் 17th, 2005- ‍க்கானத் தொகுப்பு

எனது ஞாயிறு!!

பதிந்தவர் கலை மேல் ஆகஸ்ட் 17, 2005

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. “இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்” என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?).

காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் அனுப்பி விட்டு, கணினிக்கு போக முயன்றபோதுதான் பார்த்தேன், மகளுடைய புத்தக மேசை கொஞ்சம் அலங்கோலமாய் இருந்தது. சரி அதை அடுக்கி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வேலையை ஆரம்பித்தேன். அதை அடுக்கிக் கொண்டு போனபோது பார்த்தால் அங்கே சூரியகாந்தி விதைகள் இருந்த ஒரு சின்னப் பை இருந்தது. அடடா, இதை இந்த சம்மருக்கு முளைக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேனே, இது எப்படி இங்கே வந்தது (வேறு எப்படி, வழக்கம்போல் மகளுடைய வேலைதான்), இன்னும் வேறு சில தாவர விதைகளும் வைத்திருந்தோமே என்று நினைத்துக் கொண்டே அவற்றை தேட ஆரம்பித்தேன். அதை தேடிக் கொண்டு போகும்போது கிச்சின் லே ஒரு ஒரு drawer க்குள்ளே இருந்தது. அதை எடுக்கலாம் என்று போனால், அதற்குள் தேவையே இல்லாத பல பொருட்கள். இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டே அதை கிளீன் பண்ண தொடங்கினேன். அதற்குள் book shelf இல் வைக்க வேண்டிய பொருட்களும் சேர்ந்து இருந்தது. சரி அவற்றை எடுத்துக் கொண்டு book shelf பக்கம் போனேனா, அங்கேயும் மீள அடுக்க வேண்டியவாறு நிலமை.

பிறகென்ன, book shelf அடுக்கி வைத்து விட்டு, மீண்டும் கிச்சனுக்கு வந்து drawer எல்லாம் கிளீன் பண்ணி அடுக்கி வைத்து, பிறகு மகளுடைய மேசைக்கு வந்து, அதெல்லாம் அடுக்கி முடித்து…….. அப்பாடா, நேரமும் போய்விட்டது. இனி என்ன சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தான் நேரமிருந்தது.

நான், என்னை ரொம்ப சிஸ்டமட்டிக் ஆன ஆள் என்று நினைத்திருந்தேனே. இவ்வளவுதானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பி.கு. மகளின் மேசையைப் பார்க்கும்போது, நான் சிறு வயதில் வைத்திருந்த ஒரு மேசை நினைவுக்கு வருகிறது. அதுபற்றியும் எழுத வேணும்.

.... இங்கே பதியப்பட்டது நிகழ்வுகள் | 8 மறுமொழிகள் »

நடைப்பயணம்!

பதிந்தவர் கலை மேல் ஆகஸ்ட் 17, 2005

என்னது நடைப்பயணமா? ஏதாவது போராட்டமா?

இல்லை. போராட்டமும் இல்லை, ஒரு மண்ணுமில்லை.

அப்போ ஏதாவது வேண்டுதலா?

இல்லையே, எந்த வேண்டுதலும் இல்லை. இந்த நடைப்பயணம் எனக்காக நானே மேற்கொண்டது.

எந்த தேசத்துக்கு?

எந்த தேசத்துக்குமில்லைங்க. எனது வீட்டிலிருந்து வேலைக்கு தினமும் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

பூ இவ்வளவுதானா?

அவ்வளவேதான்.

இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? சரி சரி, எவ்வளவு நேரமெடுக்கும் நடந்து போக?

ஒரு 20/25 நிமிஷமெடுக்கும் (போறதுக்கு மட்டும்).

எதுக்காக இந்த நடைப்பயணம்?

ஒரு மாசமா லீவில அங்கங்கே சுத்தி திரிஞ்சதுல, எல்லோருடைய, அன்புத்தொல்லையினால், அளவுக்கதிகமாக சாப்பிட்டு ஒரு சுற்று பெருத்த மாதிரி ஒரு உணர்வு. அதுதான் தினமும் நடந்து அந்தச் சுற்றை குறைத்துக் கொள்ளும் ஐடியா.

சரி சரி, நடக்கட்டும், நடக்கட்டும், நடைப்பயணம் தொடரட்டும்.

இன்னும் இது எத்தனை நாள் தொடரும்னு தெரியலையே. அதுதான் நமக்கு குளிர் காலம் வர ஆரம்பிச்சிருச்சே, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனாலும் இந்த நடக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறைய விஷயங்களை யோசிக்க நேரம் கிடைச்சது மாதிரி இருக்கு. தொடரத்தான் வேண்டும்.

.... இங்கே பதியப்பட்டது நிகழ்வுகள் | Leave a Comment »

சும்மா சும்மா!

பதிந்தவர் கலை மேல் ஆகஸ்ட் 17, 2005

எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது… இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை.

அதுல நிறைய விஷயங்கள் சும்மா எதுவுமே இல்லாத, உப்புச் சப்பில்லாத விஷயங்கள். ஆனாலும் எழுத வேணும் என்று தோன்றும். சரி, அதை எல்லாம் என்னிடம் இருக்கும் வலைப்பதிவுகளில் எதில் போடலாம் என்று மண்டையைக் கசக்கி யோசிச்சுப் பாத்தன். எதுலயுமே போட ஏலாது என்றுதான் மனதுக்கு படுகுது. அதுனால, இந்த ‘சும்மா சும்மா’ வலைப் பதிவை தொடங்கியிட்டன் (கஷ்ட காலம்).

இனி ஏதாவது எனக்கு மனசில வாற சும்மா சும்மா விஷயம் எல்லாம், நேரமும் ஒத்துழைத்தால் இங்கே, இந்தப் பதிவிலே விழுந்து கிடக்கும்.

.... இங்கே பதியப்பட்டது அறிமுகம் | 4 மறுமொழிகள் »